search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரிபுராவில் போராட்டம்
    X
    திரிபுராவில் போராட்டம்

    தேசிய குடியுரிமை விவகாரம்: திரிபுராவில் எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதள சேவைகள் துண்டிப்பு

    திரிபுராவில் தேசிய குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து அங்கு எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
    அகர்தலா: 

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்ததால் மசோதா சிக்கல் இன்றி நிறைவேறியது.

    இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்த மசோதா சட்டமாக நிறைவேறும்பட்சத்தில் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என அஞ்சும் பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

    இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைதளங்கள் மூலம் தவறான செய்திகளும், வதந்தியும் வேகமாக பரப்பப்பட்டு வந்தது.  

    இதற்கிடையில், திரிபுராவில் உள்ள காஞ்பூர் பகுதியில் இன்று பழங்குடியின மக்களுக்கும் பழங்குடி அல்லாத மக்களுக்கும் இடையே திடீரென மோதல் வெடித்தது. 

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் (கோப்பு படம்)

    இதில் கடைகள், வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது மட்டுமல்லாமல் தீ வைத்தும் கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

    இந்நிலையில், போலி செய்திகள் பரவாமல் இருக்க திரிபுரா மாநிலம் முழுவதும் இன்று பிற்பகல் 2 மணி முதல்   எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதள சேவைகள் நேரத்திற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை 48 மணி நேரத்திற்கு தொடரும் மாநில அரசு சார்பில் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×