search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷா
    X
    அமித்ஷா

    370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை- அமித்ஷா

    370-வது பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை என்று பாராளுமன்றத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.

    புதுடெல்லி:

    உன்னாவ் பெண் கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்று காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தது.

    அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீரில் தலைவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து பேசினார்.

    முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா உள்ளிட்ட அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறினார்.

    இதற்கு பதில் அளித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-

    காஷ்மீரில் தலைவர்களை விடுதலை செய்யும் விவகாரத்தில் மத்திய அரசு தலையீடு எதுவும் இல்லை. உள்ளூர் நிர்வாகம் அரசியல் தலைவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவு செய்யும்.

    370-வது சட்டப்பிரிவு நீக்கத்துக்கு பிறகு காஷ்மீரில் எந்த ஒரு துப்பாக்கி சூடு சம்பவமும் நடைபெற வில்லை. ஜம்மு காஷ்மீரில் ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை.

    அங்கு இயல்புநிலை திரும்பி உள்ளது. 99.5 சதவீத மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×