search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    குடியுரிமை மசோதாவில் திருத்தங்கள் செய்யாவிட்டால் ஆதரவு இல்லை- சிவசேனா அறிவிப்பு

    குடியுரிமை சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என சிவசேனா கூறி உள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு சிவசேனா கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். மக்களவையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, மாநிலங்களவையில் நாளை இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் சிவசேனா தலைவரும் மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரே இன்று அளித்த பேட்டியில், குடியுரிமை சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

    ‘மசோதாவில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என கூறியிருக்கிறோம். அதனை செய்யாவிடில் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம். 

    மசோதாவைப் பார்த்து யாராவது பயந்தால் அவர்களின் சந்தேகத்தை அரசு தீர்த்து வைக்க வேண்டும். இந்த குடியுரிமை மசோதாவை எதிர்ப்பவர்களை தேசத் துரோகி என கூறுவதா? தாங்கள் மட்டுமே  நாட்டை காப்பாற்றுவதாக பாஜக நினைத்துக்கொண்டிருப்பது மாயை’ என உத்தவ் தாக்கரே கூறினார்.

    மக்களவையில் மசோதாவுக்கு சிவசேனா ஆதரவு அளித்ததற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உத்தவ் தாக்கரே இன்று தனது கட்சியின் நிலைப்பாட்டை கூறியிருக்கிறார். மாநிலங்களவையில் சிவசேனாவுக்கு 3 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×