search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடிய கவுகாத்தி சாலை
    X
    வெறிச்சோடிய கவுகாத்தி சாலை

    அசாமில் இன்று பந்த்- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

    மத்திய அரசு மக்களவையில் நிறைவேற்றி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
    கவுகாத்தி:

    பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து  மத பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 

    இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும், மக்களவையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்ததால் மசோதா சிக்கல் இன்றி நிறைவேறியது. இதையடுத்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் செய்யப்படுகிறது.

    திப்ருகரில் நடந்த ஆர்ப்பாட்டம்

    இந்நிலையில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாணவர் சங்கம் மற்றும் அனைத்து அசாம் மாணவர் சங்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் கவுகாத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மாணவர் அமைப்பினர் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர்.

    அனைத்து அசாம் மாணவர் சங்கத்தினர் திப்ருகர், ஜோர்பத் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சாலைகளில் டயர்களை கொளுத்திப்போட்டு போக்குவரத்து தடையை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×