search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உன்னாவ் பெண் (கோப்பு படம்)
    X
    உன்னாவ் பெண் (கோப்பு படம்)

    பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க புதிதாக 218 விரைவு நீதிமன்றங்கள் - உ.பி. அரசு முடிவு

    உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை விசாரிக்க புதிதாக 218 விரைவு நீதிமன்றங்களை அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
    லக்னோ:

    இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துவருகிறது.

    அம்மாநிலத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை சிவம் திரிவேதி என்ற நபர் காதலித்துவந்துள்ளார். 
    கடந்த 2018 ஜனவரி தன்னை திருமணம் செய்துகொள்வதாக உன்னாவ் பெண்ணிடம் சிவம் திரிவேதி திருமண உத்திரவாத படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

    இந்த திருமண உத்திரவாதத்திற்கு பிறகு இருவரும் உறவில் இருந்துள்ளனர். ஆனால் உன்னாவ் பெண்ணை சிவம் திரிவேதியின் பெற்றோர், தங்கள் மணமகளாக ஏற்க மறுத்துவிட்டனர். 

    இதனால், தன்னை ஏமாற்றி திருமணம் செய்ய மறுத்ததால் போலீசில் புகார் அளித்துவிடுவேன் என உன்னாவ் பெண் சிவம் திரிவேதியிடம் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து, சிவம் திரிவேதி தனது உறவினரான சுபம் திரிவேதியுடன் இணைந்து கடந்த டிசம்பர் மாதம் உன்னாவ் பெண்ணை கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

    கோப்பு படம்

    இந்த கற்பழிப்பு குற்றம் தொடர்பாக உன்னாவ் பெண் உடனடியாக போலீசில் புகார் கொடுத்தபோதும் கோர்ட் உத்தரவுக்கு பின்னர் கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

    இந்த வழக்கில் சிவம் திரிவேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், மற்றொரு குற்றாவாளியான சுபம் திரிவேதி தலைமறைவாக இருந்துள்ளான். இதற்கிடையில் கடந்த நவம்பர் 25-ம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றம் சிவம் திரிவேதிக்கு ஜாமீன் வழங்கியது. 

    இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (டிசம்பர் 5) இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக ரேபரேலியில் உள்ள நீதிமன்றத்திற்கு உன்னாவ் பெண் சென்றுகொண்டிருந்தார். 

    அப்போது ஜாமீனில் வெளிவந்த சிவம் திரிவேதி தனது உறவினர்கள் சுபம் திரிவேதி என மொத்தம் 5 பேர் இணைந்து உன்னாவ் பெண்ணை தீ வைத்து எரித்துள்ளனர். 

    90 சதவீகித காயங்களுடன் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உன்னாவ் பெண் கடந்த் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    உத்திரபிரதேச உயர்நீதிமன்றம் மற்றும் யோகி ஆதித்யநாத் (கோப்பு படங்கள்)

    இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்களை விரைவில் விசாரித்து முடிக்க ஏதுவாக புதிதாக 218 விரைவு நீதிமன்றங்களை அமைக்க அம்மாநில அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

    இந்த 218 விரைவு நீதிமன்றங்களில் 144 நீதிமன்றங்கள் கற்பழிப்பு தொடர் வழக்குகளை விசாரிக்கவும், 74 நீதிமன்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் செய்து போக்சோ சட்டம் பாய்ந்த வழக்குகளை விசாரிக்கவும் அமைக்கப்பட உள்ளது.
    Next Story
    ×