search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்
    X
    ஜேஎன்யூ மாணவர்கள் போராட்டம்

    குடியரசுத்தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

    விடுதி கட்டண உயர்வை எதிர்த்து இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற ஜேஎன்யூ மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. 

    அப்பல்கலைக்கழக நிர்வாகம் சமீபத்தில் மாணவ-மாணவிகள் தங்கும் விடுதிக்கான கட்டணத்தை உயர்த்தியது. அதுமட்டுமல்லாமல்  உடை கட்டுப்பாடு, நேரக்கட்டுப்பாடு போன்ற பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்தியது. 

    இந்த புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜேஎன்யூ மாணவ-மாணவிகள் போராட்டத்தில் குதித்தனர். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து விடுதி கட்டணத்தை ஜேஎன்யூ பல்கலைக்கழக நிர்வாகம் சற்று குறைத்து உத்தரவு பிறப்பித்தது.

    ஆனால், உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை முற்றிலும் ரத்து செய்து பழைய கட்டணத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாணவ-மாணவிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், விடுதி கட்டண உயர்வை கண்டித்து ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் இன்று குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக செல்ல முயன்றனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

    மாணவர்கள் மீது போலீஸ் தடியடி

    பைஹஜி ஹமா என்ற மெட்ரோ நிலையம் அருகே போலீசாரால் பாதுகாப்புக்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு-முள்ளு ஏற்பட்டது. 

    இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபாட்ட மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவிவருகிறது.

    Next Story
    ×