search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்ச நீதிமன்றம்
    X
    உச்ச நீதிமன்றம்

    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு எதிர்ப்பு- உச்ச நீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முறையீடு

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன.
    புதுடெல்லி:

    தமிழகத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடிக்காமல் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக, திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என அனுமதி அளித்தது.

    இதையடுத்து, தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.

    இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளன. 

    உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீட்டு முறை சரியாக பின்பற்றப்படவில்லை எனக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டுள்ளனர். திமுகவின் கோரிக்கையை ஏற்று இந்த முறையீட்டு மனுக்கள் மீது நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×