search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    மக்களுக்கு தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது - ஜனாதிபதி பேச்சு

    நாட்டு மக்கள் அனைவருக்குமான தரமான கல்வி மற்றும் தரமான மருத்துவம் கிடைக்க நாம் இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டுள்ளார்.
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நகரில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜஸ்தான் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள மக்களுக்கு தரமான மருத்துவம் மற்றும் மருத்துவ கல்வி ஆகியவற்றை அளிப்பதற்காக ஜோத்பூர் நகரில் இந்த ஏய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை துவங்கப்பட்டது.

    இன்றைய பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பேசிய காட்சி

    அரசின் சுகாதார திட்டங்களை நிறைவேற்றியதிலும் மருத்துவம்சார்ந்த ஆராய்ச்சி பணிகளை திறம்பட செய்வதிலும் ஜோத்பூர் ஏய்ம்ஸ் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. குறிப்பாக, பழங்குடியின மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அரும்பணியாற்றியுள்ள இந்த மருத்துவமனை 24 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு மருத்துவச்சேவை ஆற்றியுள்ளது.

    எனினும், நாட்டு மக்கள் அனைவருக்குமான தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. குறிப்பாக, கிராமப்புற மக்கள் மற்றும் நாட்டின் கடைக்கோடி பகுதிகளில் வாழ்பவர்களின் நலன்களில் நாம் மேலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

    இங்கு பணியாற்றும் மருத்துவர்களும், கல்வி பயின்று பட்டம் பெற்றுள்ள இளம் மருத்துவர்களும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக தொழில்சார்ந்த பொறுப்புணர்வுடன்  உழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×