search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்தராமையா
    X
    சித்தராமையா

    நான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா

    இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெறும் என கூறப்படும் கருத்து கணிப்புகளை நான் நம்புவது இல்லை என்று சித்தராமையா கூறினார்.
    பெங்களூரு :

    கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பாகல்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கித்தூர் ராணிசென்னம்மா, கெம்பேகவுடா ஜெயந்தி விழாக்கள் எனது ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டது. இது தேகேவுடா, குமாரசாமி ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதா?. திப்பு ஜெயந்தியையும் தொடங்கினோம். எடியூரப்பா ஆட்சிக்கு வந்த பிறகு அதை நிறுத்திவிட்டார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக திப்பு சுல்தான் போராடினார். அவரது சமூகத்தினர் என்ன பாவம் செய்தனர்.

    எடியூரப்பாவுக்கு அந்த சமூகத்தின் மீது ஏன் இவ்வளவு பகை. அவர்கள் மனிதர்கள் அல்லவா?. திப்பு சுல்தான் ஒரு மன்னர், ஹைதர் அலி ஒரு மன்னர். பா.ஜனதாவினர் வெறும் அரசியல் மாயாஜாலம் செய்கிறார்கள். என்ன செய்வது, மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களிக்கிறார்கள். எடியூரப்பா முதல்-மந்திரியாகி 5 மாதங்கள் ஆகிவிட்டது. ஒரு திட்டத்தை கூட செயல்படுத்தவில்லை. எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்கியதே அவரது சாதனை.

    நானே முதல்-மந்திரியாக இருப்பேன் என்று எடியூரப்பா சொல்கிறார். அவர் நிரந்தரமாக அந்த பதவியில் இருக்க முடியுமா?. ஜனநாயகத்தில் யாரும் ஆட்சி அதிகாரத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது. நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரத்தை தருவதும், கீழே இறக்குவதும் மக்களே.

    பாஜக

    இதை எடியூரப்பா தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எடியூரப்பா போன்றவர்களிடம் ஆட்சி அதிகாரம் எளிதில் கிடைத்துவிடும். இடைத்தேர்தலுக்கு பிறகு நான் முதல்-மந்திரியாவேன் என்று எங்கும் கூறவில்லை. பா.ஜனதா வெற்றி பெறாவிட்டால் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று தான் சொன்னேன்.

    நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, ஏழைகள் அனைவருக்கும் உதவி செய்தேன். அன்ன பாக்யா, ஷாதி பாக்யா, ஷீர பாக்யா போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினேன். எடியூரப்பா என்ன செய்தார்?. மக்கள் பா.ஜனதாவுக்கு ஓட்டு போடுகிறார்கள். அக்கட்சி 113 இடங்களில் வெற்றி பெற்றதா?. 104 இடங்களில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றது. சட்டவிரோதமாக செயல்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளார்.

    வெங்காயம், பூண்டு சாப்பிடுவது இல்லை என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது அவரது பொறுப்பற்ற கருத்து. அவர் மத்திய மந்திரியாக இருக்க தகுதியானவரா? என்பது குறித்து மக்கள் ஆலோசிக்க வேண்டும். அரியானா, மராட்டிய மாநிலங்களில் கருத்துக்கணிப்புகள் என்ன ஆனது?. அங்கு எல்லாம் தலைகீழாக மாறியது.

    எல்லா கருத்துக்கணிப்புகள் உண்மையாகிவிடாது. அதனால் கருத்துக்கணிப்புகளை நான் நம்புவது இல்லை. வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் முடிவு வெளியாகிறது. மக்கள் என்ன தீர்ப்பு வழங்குகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு சித்தராமையா கூறினார்.
    Next Story
    ×