search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்கள்
    X
    வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்கள்

    ஜார்க்கண்ட் சட்டசபைக்கு நாளை இரண்டாம் கட்ட தேர்தல்

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் நவம்பர் 30-ம் தேதி தொடங்கி  5 கட்டங்களாக நடைபெறுகிறது. நவம்பர் 30-ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

    இங்கு ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

    சட்டசபை தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

    இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் 20 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. 

    இந்த தேர்தலில் 47 லட்சத்து 24 ஆயிரத்து 968 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 260 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

    காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணியளவில் நிறைவடையும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது. 
    Next Story
    ×