search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்யானந்தா
    X
    நித்யானந்தா

    நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து - வெளியுறவுத்துறை அமைச்சகம்

    சர்ச்சை சாமியார் நித்யானந்தாவின் பழைய பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது மேலும் அவரின் புதிய பாஸ்போர்ட்டுக்கான விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளோம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    சர்ச்சை சாமியார் நித்யானந்தா குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம் போன்ற புகார்களின் அடிப்படையில் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார்.

    நித்யானந்தா ஈக்வடார் நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவை  வாங்கி கைலாசா எனும் தனி நாடாக பிரகடனப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின. அவ்வப்போது வீடியோக்களும் வெளியிட்டு வருகிறார்.

    நித்யானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், சிறை வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நித்யானந்தா மற்றும் பாஸ்போர்ட் (கோப்பு படம்)

    இந்நிலையில், நித்யானந்தாவின் பாஸ்போர்ட்டையும், புதிய பாஸ்போர்ட் வேண்டிய அவரது விண்ணப்பத்தையும் ரத்து செய்துள்ளோம் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    இந்த சந்திப்பிற்கிடையே, இந்தியா - ஜப்பான் உச்சி மாநாடு வரும் 15 தேதி முதல் 17 தேதி வரை நடைபெற உள்ளது என ரவீஷ் குமார் செய்தியாளர்களிடையே கூறியது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×