search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
    X
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

    போக்சோ சட்டத்தின்கீழ் தண்டனை பெறுபவர்கள் கருணை மனு அளிக்க உரிமை கூடாது -ஜனாதிபதி

    போக்சோ சட்டத்தின்கீழ் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெறும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை அளிக்கக் கூடாது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும், அவர்களுக்கு கருணை காட்டக்கூடாது என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் சிரோகியில் நடந்த பெண்களுக்கான தேசிய மாநாட்டில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    பெண்கள் பாதுகாப்பு தீவிர பிரச்சனையாக உள்ளது. போக்சோ சட்டத்தின்கீழ் கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெறும் குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்யும் உரிமை அளிக்கக் கூடாது. கருணை மனுக்களை பாராளுமன்றமே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் தண்டனை பெற்ற வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் ஜனாதிபதிக்கு பரிந்துரை அனுப்பி உள்ளது.
    Next Story
    ×