search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் டாக்டரின் தந்தை
    X
    பெண் டாக்டரின் தந்தை

    எனது மகளின் ஆத்மா சாந்தி அடையும் - பெண் டாக்டரின் தந்தை

    ஐதராபாத்தில் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதால் தனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும் என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
    பெங்களூரு:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று அதிகாலை குற்றவாளிகளை அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதால் 4 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். காவல்துறையின் இந்த நடவடிக்கையை பலரும் வரவேற்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக பெண் டாக்டரின் தந்தை கூறியதாவது:

    என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகின்றன. குற்றவாளிகள் 4 பேரையும் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா தற்போது சாந்தியடையும். 4 பேரை சுட்டுக்கொன்ற போலீசாருக்கும், தெலுங்கானா அரசுக்கும் நன்றி கூறுகிறேன்.

    இவ்வாறு பெண் டாக்டரின் தந்தை தெரிவித்துள்ளார்.

    கல்லூரி மாணவிகள் மகிழ்ச்சி

    ஐதராபாத் என்கவுண்டரை கேள்விப்பட்ட மாணவிகள் கல்லூரி பேருந்தில் சென்றபோது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ஐதராபாத்தில் கல்லூரி சென்ற மாணவிகள் சாலையில் பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை பார்த்து கைகாட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    Next Story
    ×