search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான குற்றவாளிகள்
    X
    கைதான குற்றவாளிகள்

    ஐதராபாத் பெண் டாக்டர் கற்பழிப்பு, கொலை வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைப்பு

    ஐதராபாத் நகரில் பெண் டாக்டர் கற்பழிப்பு, கொலை வழக்கு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்து தெலுங்கானா மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து சேர்லாப்பள்ளி சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும் விரைவில் விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான தண்டனை வழங்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.

    எரிக்கப்பட்ட பிரேதம் கிடந்த இடம்

    காமுகர்களை பொது இடத்தில் அடித்துக் கொல்ல வேண்டும் என ஜெயா பச்சன் ஆவேசமாக குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்து தெலுங்கானா மாநில அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மகபூப்நகர் மாவட்ட முதல் வகுப்பு கூடுதல் அமர்வு நீதிபதி தலைமையில் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என தெலுங்கானா அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×