search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் ஜகதீப் தங்கார்
    X
    கவர்னர் ஜகதீப் தங்கார்

    மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் மேற்கு வங்காள சட்டசபை 2 நாளுக்கு ஒத்திவைப்பு

    மேற்கு வங்காளத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு மாநில கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் இரு நாள்களுக்கு சட்டசபை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலத்தில் தற்போது சட்ட்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா பானர்ஜி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், இன்றும் சட்டசபை கூட்டம் கூடியது. அப்போது சபாநாயகர் பீமன் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சட்டசபையில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. ஆனால் அந்த மசோதாக்களுக்கு கவர்னர் ஜகதீப் தங்கார் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதனால், மேற்கு வங்காள சட்டசபை 2 நாள்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, சடடசபை கூட்டத்தொடர் டிசம்பர் 6ம் தேதி காலை 11 மணிக்கு மீண்டும் கூடும் என குறிப்பிட்டார். 
    Next Story
    ×