search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    போலீஸ் குடியிருப்பில் வசித்த மாணவியை கற்பழிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்

    திருவனந்தபுரம் அருகே போலீஸ் குடியிருப்பில் வசித்த மாணவியை கற்பழிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் பேரூர் கடை, ஆயுதப்படை போலீஸ் முகாமில் வெடிகுண்டு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சஜீவ்குமார்.

    இவர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒரு போலீஸ்காரருக்கு 8-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று அந்த மாணவியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் குமார் வீடு புகுந்து அந்த மாணவியை கற்பழிக்க முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பயத்தில் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் சஜீவ்குமார் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

    தனது பெற்றோர் வீடு திரும்பியதும் தனக்கு நேர்ந்த கொடுமையை அவர்களிடம் கூறி மாணவி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். மேலும் உயர்போலீஸ் அதிகாரிகள் கவனத்திற்கும் இது கொண்டு செல்லப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ்குமாரை சஸ்பெண்டு செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட சஜீவ்குமார் திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார். அவரை 14 நாட்கள் ஜெயிலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சஜீவ்குமாரை போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் ஜெயிலில் அடைத்தனர்.
    Next Story
    ×