என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி குண்டு காயங்களுடன் இறந்து கிடந்த முதலை
Byமாலை மலர்3 Dec 2019 7:47 AM GMT (Updated: 3 Dec 2019 12:28 PM GMT)
உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்த முதலையின் உடலைக் கண்டு வனத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பான்டா:
சாலை விபத்துகள், கிணறுகளில் விழுதல், பிளாஸ்டிக் கழிவுகளை உண்பது போன்ற காரணங்களால் வனவிலங்குகள் இறப்பு அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உயிரிழந்துள்ளதாக வன விலங்கு பாதுகாப்பு சங்க தரவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதாகவும் சுற்றுச்சூழல் மற்றும் விலங்கியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஏற்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்த முதலையின் உடலை வனத்துறை அதிகாரிகள் கண்டறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் பான்டா மாவட்டத்தில் திண்டுவாரி பகுதியில் உள்ள யமுனா ஆற்றங்கரை பகுதிகளில் நேற்று மாலை வனத்துறையினர் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் முதலை ஒன்று கிடப்பதை கண்டனர்.
முதலை உயிருடன் இருப்பதாக முதலில் நினைத்த அதிகாரிகள், அருகில் சென்றவுடன் முதலை இறந்திருந்ததை கண்டறிந்தனர். அதன் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஏற்பட்ட காயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
‘யாரோ ஒருவர் முதலையை துப்பாக்கியால் சுட்டிருப்பது போல் தெரிகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது’, என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×