search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
    X
    மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

    ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் வருமா? பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

    ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா என்பது குறித்து பாராளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையை அமல்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி, கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. நேரடி, மறைமுக வரிவிதிப்பின் கீழ் இருந்த பெரும்பாலான பொருட்கள், ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

    ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்கள், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படாமல் உள்ளன. முன்பு போலவே, அப்பொருட்களின் மீது உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி விதிக்கப்பட்டு வருகிறது.

    பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களாக எழுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெட்ரோலிய பொருட்களின் விலை கடுமையாக உயரும்போதெல்லாம் இந்த கோரிக்கை எழுந்து வருகிறது. இதுகுறித்து மாநில நிதி மந்திரிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    இந்நிலையில், நேற்று பாராளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, இதுதொடர்பாக துணை கேள்விகள் எழுப்பப்பட்டன. பா.ஜனதா உறுப்பினர் சுக்பீர்சிங் ஜானபுரியா, பெட்ரோலிய பொருட்கள் எப்போது ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும்? என்று கேட்டார்.

    தி.மு.க. உறுப்பினர் தயாநிதி மாறன், ‘ஒரே நாடு ஒரே வரி‘ வாக்குறுதியை அமல்படுத்த இதுவே தக்க தருணம் என்று கூறினார்.

    அவர்களுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

    பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி பெரும் முயற்சி எடுத்தார். இதுதொடர்பாக கருத்தொற்றுமை அடிப்படையில் பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டது.இருப்பினும், எல்லா மாநில பிரதிநிதிகளும் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×