search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்
    X
    சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்

    பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை - அகிலேஷ் யாதவ்

    உத்தர பிரதேசத்தில் நடந்து வரும் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    லக்னோ:

    நாட்டில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 

    சமீபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    குறிப்பாக நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உள்ள உத்தர பிரதேச மாநிலத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அம்மாநில எதிர் கட்சி தலைவரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். 

    இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    உத்தர பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தினமும் கற்பழிப்பு, கொலை போன்ற சம்பவஙகள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. 

    உத்தர பிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்

    பள்ளி செல்லும் குழந்தைகள், அலுவலகம், பொது இடங்களுக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அந்த அளவுக்கு உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு 'காட்டு ராஜாங்கம்' இங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. 

    சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவசர உதவிக்கான தொலைபேசி எண்ணாக 100 என்ற சுலபமான நம்பரை வைத்திருந்தோம். ஆனால் தற்போது உள்ள பாஜக அரசு அந்த எண்ணை 112 என மாற்றி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர்’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×