search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித் ஷா
    X
    அமித் ஷா

    மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் வளர்ச்சியை எட்ட முடியும் - அமித்ஷா

    மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா தெரிவித்துள்ளார்.
    ராஞ்சி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன.

    முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

    அம்மாநிலத்தில் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு வரும் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக உள்பட்ட பல்வேறு கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா ஜார்கண்ட் மாநிலம் சக்ரதார்பூர் பகுதியில்  இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

    'பிரதமர் மோடியும், முதல்மந்திரியாக உள்ள பாஜகவின் ரகுபர் தாசும் இணைந்து இம்மாநிலத்தில் நக்சலைட்டுகள் உருவாகும் வழியை அழித்து வளர்ச்சிக்கான பாதையை உருவாக்கியுள்ளனர். 

    ஜார்கண்ட் பிரச்சாரத்தில் அமித் ஷா

    இம்மாநிலத்தில் தற்போது உள்ள பாஜக தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழல் குற்றமும் நடைபெறவில்லை. ஜார்கண்ட் வரலாற்றிலேயே ஒரு அரசு 5 ஆண்டுகள் தனது முழு பதவி காலத்தையும் நிறைவு செய்தது பாஜக தான். 

    பாஜக-வால் தான் நிலையான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும்.

    2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்றத்தேர்தலுக்குள் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) பட்டியல் தயாரிக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கண்டறியப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×