search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சந்திரசேகர ராவ்
    X
    சந்திரசேகர ராவ்

    பெண் டாக்டர் எரித்து கொலை - விரைவு நீதிமன்றம் அமைக்க முதல் மந்திரி உத்தரவு

    தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொலை குறித்து விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என முதல் மந்திரி சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே, புதன்கிழமை இரவு கால்நடை பெண் டாக்டர் பிரியங்கா ரெட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
     
    ஷாட்நகர் அருகேயுள்ள டோல்கேட் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில்  பதிவான லாரி எண்களை அடிப்படையாக வைத்து லாரி டிரைவர் முகமது பாஷா, சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  

    இதற்கிடையே, பெண் டாக்டர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கத் தவறிய 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×