
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசின் மீது நேற்று சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
இந்நிலையில், அம்மாநில சட்டசபை சபாநாயகர் பதவிக்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் நானா பட்டோலே வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, சட்டசபை சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா பட்டோலே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய சபாநாயகராக பொறுப்பேற்கும் நானா பட்டோலே(56) விதர்பா பகுதியில் உள்ள சக்கோலி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 3 முறை எம்.எல்.ஏ.வாகவும் பன்டாரா-கோன்டியா பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.