search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்களிக்க வந்த பெண்கள்
    X
    வாக்களிக்க வந்த பெண்கள்

    ஜார்கண்ட் சட்டசபை முதல்கட்ட தேர்தல் - 62.87 சதவீதம் வாக்குப்பதிவு

    ஜார்க்கண்ட் சட்டசபைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று முடிவடைந்த நிலையில் 62.87 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  இன்று முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நடைபெறுகின்றன. டிசம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்நிலையில், முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குரிமை பெற்ற 37 லட்சத்து 83 ஆயிரத்து 55 பேர்  இன்றைய தேர்தலில் களம் கண்ட 15 பெண்கள் உள்பட 189 வேட்பாளர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றனர்.

    ஆண் வாக்காளர்களின் நீண்ட வரிசை

    இன்றைய வாக்குப்பதிவின்போது சில வாக்குச்சாவடிகளின் அருகே குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

    மேலும், பாலமு மாவட்டம், டல்ட்டோன்கஞ்ச் தொகுதிக்கு உட்பட்ட கோசியாரா வாக்குச்சாவடிக்குள் அந்த தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கே.என்.திரிபாதி துப்பாக்கியுடன் வந்து மிரட்டிய சம்பவத்தால் ஆத்திரமடைந்த வாக்காளர்கள் அங்கு நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.

    காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடைந்த நிலையில் 62.87 சதவீதம் வாக்குகள் பதிவானதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×