search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தவ் தாக்கரே
    X
    உத்தவ் தாக்கரே

    மும்பை ஆரே பகுதி மெட்ரோ பார்க்கிங் பணி நிறுத்தம் - உத்தவ் தாக்கரே அதிரடி

    மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் பணிகளுக்கு தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.
    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு மெட்ரோ ரெயில் வழித்தடங்களுக்கு அம்மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
     
    இதன் ஒரு பகுதியாக மும்பை ஆரே காலனி பகுதியில் மெட்ரொ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள சுமார் 2 ஆயிரத்து 700 மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.

    இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    பல மாதங்கள் நடந்து வந்த இந்த வழக்கை மும்பை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததால் மரங்களை வெட்டும் பணி நள்ளிரவே தொடங்கியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதையடுத்து, ஆரே காலனி பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக தாமே முன்வந்து விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பணிக்காக மரங்களை வெட்ட தடை விதித்தது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே, மும்பை ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் பணிகளுக்கு தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளார்.

    ம்காராஷ்டிரா முதல் மந்திரியாக பதவியேற்ற உத்தவ் தாக்கரே இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ஆரே பகுதியில் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மேலும் அங்கு ஒரு இலையை கூட வெட்டக்கூடாது என தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×