search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோனியா காந்தி
    X
    சோனியா காந்தி

    பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியவில்லை - உத்தவ் தாக்கரேவுக்கு சோனியாகாந்தி கடிதம்

    மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக பதவியேற்கும் விழா மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் இன்று மாலை நடைபெற்றது.

    இதற்கிடையே, சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் நேற்று சந்தித்தார். 

    அப்போது, பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வீட்டிற்கு சென்ற ஆதித்யா தாக்கரே பதவி ஏற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, உத்தவ் தாக்கரேவுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது:

    நாடு பா.ஜ.க.வால் முன்னறிவிக்கப்படாத அச்சுறுத்தல்களை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முழு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் ஒன்றிணைந்து உள்ளன.

    நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது.  விவசாயிகள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    ஆதித்ய தாக்கரே நேற்று என்னை சந்தித்து இன்று மாலை நீங்கள் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×