search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மம்தா பானர்ஜி
    X
    மம்தா பானர்ஜி

    மேற்கு வங்காள இடைத்தேர்தல் - 3 தொகுதிகளையும் கைப்பற்றியது திரிணாமுல் காங்கிரஸ்

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 3 சட்டசபை தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் காளியாகஞ்ச், கரக்பூர் மற்றும் கரீம்புர் தொகுதிகளுக்கான சட்டசபை இடைத்தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.

    இதில், காளியாகஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தபான் தேவ் சின்ஹா பாஜக வேட்பாளர் கமல் சந்திராவை விட 2,418  வாக்குகள் அதிகம் பெற்றார். 

    கரக்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பிரதிப் சர்க்கார் பாஜக வேட்பாளர் பிரேம் சந்த்ஜாவை விட 20788 வாக்குகள் அதிகம் பெற்றார்.

    கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் பிமலேந்து சின்ஹா ராய், பாஜக வேட்பாளர் ஜெய்பிரகாஷ் மஜும்தாரைவிட 24000க்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

    இடைத்தேர்தல் நடைபெற்ற 3 சட்டசபை தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

    இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி குறித்து பேசிய மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மக்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×