search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு
    X
    மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு

    ஆபாச வீடியோக்களால் சிறு குழந்தைகளுக்கு பாதிப்பு -மாநிலங்களவையில் வெங்கையா நாயுடு பேச்சு

    இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் சிறு குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக மாநிலங்களவையில் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.
    புதுடெல்லி:

    இணையதளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோக்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று அதிமுக எம்பி விஜிலா சத்யானந்த் கேள்வி எழுப்பினார். அப்போது, குழந்தைகளை பாதிக்கும் வகையிலான ஆபாச வீடியோக்களை தடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். 

    இந்த கோரிக்கையை ஆதரித்து மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசினார். 

    இணையதளங்களில் வெளியாகும் ஆபாச படங்கள் சிறு குழந்தைகளை தொடர்ந்து பாதிப்பதாகவும், இதனால் அந்த குழந்தைகளின் பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். பல்வேறு சட்டங்கள் அமலில் உள்ள போதிலும், இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் வெளியாகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

    அதிமுக எம்பியின் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
    Next Story
    ×