search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் நரேந்திர மோடி
    X
    பிரதமர் நரேந்திர மோடி

    மகாராஷ்டிரா அரசியல் சூழல் பற்றி வைரலாகும் பிரதமர் மோடியின் ட்வீட்

    மகாராஷ்ட்ராவின் அரசியல் சூழல் பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் ட்வீட் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.



    மகாராஷ்டா மாநிலத்தின் முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவிக்கும் ட்விட்டர் பதிவு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஃபேஸ்புக்கில் வைரலாகும் ஸ்கிரீன்ஷாட்களில் பிரதமர் மோடி தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவித்த ட்வீட் மற்றும் பதவி விலகியதற்கு வருத்தம் தெரிவிக்கும் ட்வீட்கள் இடம்பெற்றிருக்கிறது.

    இதுபற்றிய ஆய்வுகளில் பிரதமர் மோடி இரண்டாவது ட்வீட்டை பதிவிடவில்லை என்றும், அது போட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கை ஆய்வு செய்ததில், நவம்பர் 23-ம் தேதி தேவேந்திர பட்னாவிஸ்-க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருக்கிறார்.  

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    பின் ஆட்சியை தொடர போதுமான ஆதரவின்றி தேவேந்திர பட்னாவிஸ் நவம்பர் 26-ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதே தேதியில் பிரதமர் மோடி பல்வேறு ட்வீட்களை பதிவிட்டிருக்கிறார். ஆனால் வைரல் ஸ்கிரீன்ஷாட்டில் இருப்பது போன்று எந்த ட்வீட்டும் காணப்படவில்லை. அந்த வகையில் பிரதமர் மோடி பதிவிட்டதாக வைரலாகும் ட்வீட் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×