search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவேந்திர பட்னாவிஸ்
    X
    தேவேந்திர பட்னாவிஸ்

    மகாராஷ்டிரா மக்களிடம் பட்னாவிஸ் மன்னிப்பு கேட்கவேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

    மகாராஷ்டிரா மக்களிடம் தேவேந்திர பட்னாவிஸ் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டுமேன காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிராவில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பாஜக மாநில சட்டசபையில் நாளை நிரூபிக்க வேண்டுமேன சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டது.

    இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ், ’தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் பலம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த அஜித் பவார் சொந்தக் காரணங்களுக்காக தனது துணை முதல் மந்திரி பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்து விட்டதால் எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இல்லை’ என தெரிவித்தார். 

    பின்னர், கவர்னர் மாளிகை சென்ற பட்னாவிஸ் மாநில கவர்னர் பகத் சிங் கோஷாரியிடம் தனது ராஜினாமா கடிததை வழங்கினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்திதொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியதாவது,’ மகாராஷ்டிராவில் மக்கள் வழங்கிய தீர்ப்பை கடத்த முயன்ற பாஜக கட்சியும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளனர்.

    பட்னாவிஸ், மகாராஷ்டிரா கவர்னர் மற்றும் அஜித் பவார்

    மேலும், பொய்கள் மற்றும் கட்சித்தாவல் போன்ற செயல்களால் உருவாக்கப்பட்ட பாஜக தலைமையிலான மகாராஷ்டிரா அரசு சீட்டு அட்டைகளால் உருவாக்கப்பட்ட வீடு போன்று சரிந்து விட்டது. தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் மகாராஷ்டிரா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ இவ்வாறு அவர் கூறினார்.
         
    Next Story
    ×