search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்தபோது எடுத்தப் படம்
    X
    கவர்னரிடம் ராஜினாமா கடிதம் அளித்தபோது எடுத்தப் படம்

    குதிரை பேரத்தில் விருப்பம் இல்லாததால் ராஜினாமா செய்கிறேன்: தேவேந்திர பட்னாவிஸ் பேட்டி

    மகாராஷ்டிரா சட்டசபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாத நிலையில் எம்.எல்.ஏ.க்களை வாங்கும் குதிரை பேரத்தில் விருப்பம் இல்லாததால் ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
    மும்பை:

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, மகாராஷ்டிரா சட்டசபையில் ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலத்தை  நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டதையடுத்து, தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    மும்பையில் செய்தியாளர்கள் மத்தியில் இன்று பிற்பகல் இந்த முடிவை அறிவித்த பட்னாவிஸ், எம்.எல்.ஏ.க்களை வாங்கும் குதிரை பேரத்தில் விருப்பம் இல்லாததால் ராஜினாமா செய்வதாக குறிப்பிட்டார்.

    பட்னாவிஸ் பேட்டி

    எங்களுக்கு முதல் மந்திரி பதவி அளிக்கும் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று தேர்தலுக்கு முன்னரே சிவசேனா
    தெரிவித்திருந்தது.

    தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்களின் பலம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்த அஜித் பவார் சொந்தக் காரணங்களுக்காக தனது துணை முதல் மந்திரி பதவியை இன்று திடீரென்று ராஜினாமா செய்து விட்டதால் எங்களுக்கு போதுமான பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாக தெரிவதால் கவர்னரை சந்தித்து  எனது ராஜினாமா கடிதத்தை அனுப்ப தீர்மானித்துள்ளேன் எனவும் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
    Next Story
    ×