search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மஞ்சுநாத் ரெட்டி
    X
    மஞ்சுநாத் ரெட்டி

    ராணுவ அதிகாரி போல நடித்து மோசடி செய்தவர் கைது

    கர்நாடகாவில் ராணுவ அதிகாரி போல நடித்து மோசடியில் ஈடுபட்டவரை சிறப்பு போலீஸ் குழு கைது செய்தது.
    மங்களூர்:

    மங்களூரின் சூரத்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் ராணுவ அதிகாரி போன்று நடித்து, மோசடியில் ஈடுபடுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ராணுவ புலானாய்வு பிரிவு மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் சிறப்பு குழு இணைந்து அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இந்திய ராணுவ அதிகாரி போன்று நடித்து மோசடியில் ஈடுபட்டதாக மஞ்சுநாத் ரெட்டி என்பவரை கைது செய்தனர்.

    இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘மஞ்சுநாத் ரெட்டி என்பவர் இந்திய ராணுவ அதிகாரி போன்று வேஷமிட்டு மோசடி செய்துள்ளார். அவரது வசிப்பிடத்தில் இருந்து ராணுவ அதிகாரி உடைகள், போலி ராணுவ அட்டை, ரப்பர் ஸ்டாம்புகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    பெல்காம் நகரில் உள்ள ராணுவ படைப்பிரிவு அலுவலக வளாகத்தில் பணியாற்றியதாகவும், அங்கு இருந்துதான் அனைத்து ராணுவ உடைகளையும் வாங்கியதாகவும் மஞ்சுநாத் கூறினார். 

    நய்ப் சுபேதார் / சுபேதார் மேஜர் பதவி வகிக்கும் இராணுவ ஜூனியர் கமிஷனட் அதிகாரி என கூறி, ஓய்வுபெற்ற மற்றும் உயிர்நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பாராட்டு விழாக்கள் போன்ற பல்வேறு பொது நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலம், அவர் மக்களின் நம்பிக்கையைப் பெற்றார், பின்னர் ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான பணத்தை பெற்றுள்ளார்.

    அவர் தனியாக இந்த மோசடியில் ஈடுபட்டாரா? அல்லது அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வாங்கிகொண்டு ஏமாற்றும் ஏஜெண்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது’ என தெரிவித்தனர்.

    Next Story
    ×