search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    அயோத்தி தீர்ப்பின் பின்னர் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

    அயோத்தி நிலம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு பின்னர் முதிர்ந்த அறிவுத்திறனுடன் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டுகளாக மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

    அவ்வகையில், இன்றைய வானொலி உரையின்போது அயோத்தி நிலம் வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு பின்னர் முதிர்ந்த அறிவுத்திறனுடன் அமைதி காத்த இந்திய மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

    ’வரலாற்று சிறப்புக்குரிய இந்த தீர்ப்புக்கு பின்னர் புதிய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புக்கான தீர்மானத்துடன் நாடு புதிய பாதையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.

    மன் கி பாத் ஒலிப்பதிவு

    'நவம்பர் 9-ம் தேதி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை இருகரம் நீட்டி வரவேற்ற 130 கோடி இந்திய மக்களும்நாட்டின் நலனே அதிமுக்கியமானது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர். அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கம் ஆகியவை எங்கள் நாட்டுக்கு முதன்மையானது என்பதை தெளிவுப்படுத்தி விட்டனர்.

    இந்த பொறுமைக்காகவும் முதிர்ந்த அறிவுத்திறனுக்காகவும் அவர்களுக்கு எல்லாம் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான இந்த உணர்வை தனதாக்கிக் கொண்டு புதிய இந்தியா முன்னேற வேண்டும் என்பதே எனது ஆசையும் நம்பிக்கையும் ஆகும்’ எனவும் இன்றைய வானொலி உரையில் மோடி குறிப்பிட்டார்.

    Next Story
    ×