search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    மகாராஷ்டிராவில் இன்றே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் - சிவசேனா தரப்பு வாதம்

    மகாராஷ்டிராவில் இன்றே பெரும்பான்மனையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் சிவசேனா தரப்பு வாதம் செய்து வருகிறது.
    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியது. நீதிபதிகள் ரமணா, அசோக் பூஷண், சஞ்சீவ் கண்ணா ஆகிய 3 பேர் கொண்ட அமர்வில் விசாரணை தொடங்கியது.

    ஞாயிறன்று விசாரணை நடத்தும் நிலைக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், ஆனால் அதற்கு நாங்கள் மட்டுமே காரணம் அல்ல என்றும் சிவசேனா வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார். 

    மேலும், பதவிப்பிரமாணம் தொடர்பாக எந்த ஆவணமும் பொதுவெளியில் காட்டப்படவில்லை. ஆளுநரின் செயல்பாடு ஒருதலைப்பட்சமாக உள்ளது. பெரும்பான்மை இருந்தால் பாஜக சட்டசபையில் இன்றே நிரூபிக்கட்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்துவிட்டது. அமைச்சரவை பரிந்துரை இல்லாமல் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என கபில் சிபல் தனது வாதங்களை முன்வைத்தார். 
    Next Story
    ×