search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    முகம் முழுக்க இரத்தம் - வைரல் புகைப்படம் ஜேஎன்யு மாணவர் போராட்டத்தில் எடுக்கப்பட்டதா?

    சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்தில் எடுக்கப்பட்டதா என தொடர்ந்து பார்ப்போம்.



    முகம் முழுக்க ரத்தம் ஒழுகும் நிலையில் பெண்மணியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர்கள் போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பல்கலைக்கழகத்தின் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி முகத்தில் ரத்தம் சொட்டும் நிலையில் இருக்கும் பெண்மணியின் புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

    வைரல் பதிவுகளில், “நம்பிக்கை என வரும் போது மலர்கள் தூவப்படுகின்றன. கல்வியை பற்றி பேசும் போது அடிக்கப்படுகிறோம். இதுதான் யோகி மற்றும் மோடியின் உண்மை நிலை. இவர்கள் ஏழைகள் யாரும் கல்வி கற்க கூடாது என்ற நிலைப்பாடு கொண்டுள்ளனர்” என எழுதப்பட்டுள்ளது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    மற்றொரு சமூக வலைத்தள பதிவுகளில், “மோடி அரசாங்கம் ஜே.என்.யு. மாணவர்கள் மீது கருணையின்றி தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடானது” என்றும் எழுதப்பட்டுள்ளது.

    வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்ததில் இதே புகைப்படம் பிப்ரவரி 20, 2005 ஆம் தேதி ஜபாரியா இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் மொகரம் அனுசரிக்கப்பட்ட செய்தியில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், வைரலாகும் புகைப்படத்திற்கும் தற்சமயம் நடைபெறும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் போராட்டத்திற்கும் தொடர்பு இல்லை என உறுதியாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×