search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத் பவாருடன் மோடி (கோப்புப் படம்)
    X
    சரத் பவாருடன் மோடி (கோப்புப் படம்)

    பிரதமர் மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பராளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 3 பக்கங்களை கொண்ட மனுவினை அளித்தார்.
    புதுடெல்லி:

    தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  பராளுமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 3 பக்கங்களை கொண்ட மனுவினை அளித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் அளவுக்கதிகமாக பெய்த மழையினால் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி முற்றிலுமாக நாசமைடைந்தன. குறிப்பாக, வெங்காயம் விளைச்சலுக்கு பிரசித்திபெற்ற நாசிக் மாவட்ட விவசாயிகள் பெரும் இழப்புக்கு உள்ளாகினர்.

    சுமார் 35 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருத்திச் செடிகள் நாசமானதுடன் சோயா பீன்ஸ், நெல், சோளம், தக்காளி மற்றும் இதர காய்கறிகளின் விளைச்சல் பொய்த்துப் போன விரக்தியில்  நாசிக் மாவட்டத்தில் மட்டும் 44 விவசாயிகள் தற்கொலை செய்துக்கொண்டனர்.

    சரத்பவார் அளித்த மனு

    இந்நிலையில், டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்  இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து 3 பக்கங்களை கொண்ட மனுவினை அளித்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் இடைவிடாது பெய்த கனமழையின் விளைவாக 325 தாலுகாக்களில் 54.22 லட்சம் ஏக்கர் நிலத்தில் பயிர்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இதனால் விவசாயிகள் விவரிக்க முடியாத துயரத்தில் சிக்கியுள்ள இவ்வேளையில் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளதால் விவசாயிகளின் துயர்துடைப்பு மற்றும் நிவாரணம் தொடர்பான உங்களின் உடனடித் தலையீடு மிகவும் அவசியமாக உள்ளது.

    அவர்களுக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக உங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என சரத்பவார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×