search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பை பங்குச்சந்தை
    X
    மும்பை பங்குச்சந்தை

    பங்குச்சந்தைகள் உயர்வு- புதிய உச்சத்தை எட்டியது சென்செக்ஸ்

    மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 40 ஆயிரத்து 816 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது.
    மும்பை:

    இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியதால் முன்னணி நிறுவன பங்குகளின் விலை கணிசமான அளவுக்கு உயர்ந்தன. 

    மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் இடையே குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று காலையில் 321 புள்ளிகள் அதிகரித்து, 40 ஆயிரத்து 816 புள்ளிகளுடன் புதிய உச்சத்தை எட்டியது. இதற்கு முன்பு, சென்செக்ஸ் 40 ஆயிரத்து 789 புள்ளிகள் வரை உயர்ந்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

    இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி இன்று 87 புள்ளிகள் உயர்ந்து 12,027 புள்ளிகளை தொட்டது. 

    வரிச்சலுகை அறிவிப்பு, வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது பங்குச்சந்தையில் சாதகமான நிலைக்கு வழிவகுத்துள்ளது. 

    மதிய நிலவரப்படி சென்செக்ஸ் 40 ஆயிரத்து 704 புள்ளிகளாகவும், நிப்டி 12 ஆயிரத்து 12 புள்ளிகளாகவும் இருந்தது. ரிலையன்ஸ், சன் பார்மா, இந்தஸ்இந்த் வங்கி, பிபிசிஎல், ஜீ என்டர்டெயின் உள்ளிட்ட 1187 நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன. 1054 நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன. 163 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. 
    Next Story
    ×