search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ்
    X
    காங்கிரஸ்

    பொருளாதார மந்தநிலை - மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

    நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலையை கண்டித்து வரும் 30-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது .
    புதுடெல்லி:

    டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநில தலைவர்களுடனான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.
     
    அதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலைக்கு காரணமான மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து வரும் 30-ம் தேதி டெல்லி ராம்லீலா திடலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறு என காங்கிரஸ் தலைமை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், பொருளாதார மந்தநிலையை கண்டித்து நவம்பர் 30-ம் தேதி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்துள்ளது.

    இதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான கே.சி.வேணுகோபால் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில்,
    மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 30-ம் தேதி டெல்லியில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் டிசம்பர் 14-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார்.
    Next Story
    ×