search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரவிந்த் கெஜ்ரிவால்
    X
    அரவிந்த் கெஜ்ரிவால்

    டெல்லியில் வீடுகளுக்கு இலவச கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்: கெஜ்ரிவால் அறிவிப்பு

    டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கில் ‘முதல்-மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ ஒன்றை மாநில அரசு தொடங்கி உள்ளது.
    புதுடெல்லி :

    டெல்லியில் வீடுகளுக்கு இலவசமாக கழிவுநீர் குழாய் இணைப்புகளை வழங்கும் நோக்கில் ‘முதல்-மந்திரி கழிவுநீர் குழாய் இணைப்பு திட்டம்’ ஒன்றை மாநில அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் இணைப்பு கேட்டு அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதத்துக்குள் விண்ணப்பித்தால், இலவசமாக இணைப்பு வழங்கப்படும்.

    இந்த திட்டம் பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டு முதல்-மந்திரி கெஜ்ரிவால் பேசும்போது, ‘டெல்லியில் சில குடும்பங்கள் இன்னும் கழிவுநீர் குழாய் இணைப்புகளை பெறவில்லை. அவர்களுக்காக இலவச இணைப்புகளை செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்துக்காக சில பகுதிகளில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலம் 787 காலானிகளை சேர்ந்த சுமார் 2.31 லட்சம் பேர் பயனடைவார்கள்’ என்று தெரிவித்தார்.

    இந்த திட்டத்தில் அனைத்து பணிகளும் இலவசமாக மேற்கொள்ளப்படும் எனக்கூறிய கெஜ்ரிவால், இதன் மூலம் சராசரியாக ஒரு குடும்பம் ரூ.15 ஆயிரத்தை மிச்சப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×