
மேகாலயாவின் தலைநகர் ஷில்லாங்கில் உள்ள பழமையான கிறிஸ்தவ ஆலயத்தில் எதிர்பாராதவிதமாக நேற்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், கிறிஸ்தவ ஆலயத்தை ஒட்டியுள்ள பல வீடுகள் எரிந்து சாம்பலாயின.
இதில் கிறிஸ்தவ ஆலயத்தின் அருகே உள்ள வீட்டில் வசித்து வந்த வயதான கணவன்-மனைவி புகைமூட்டத்தில் சிக்கி, மூச்சுத்திணறி உயிர் இழந்தனர். இந்த தீ விபத்தில் கிறிஸ்தவ ஆலயம் முழுவதும் சேதம் அடைந்தது.