search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுக்குரிய சிலை மற்றும் விருதுடன் சுதர்சன் பட்நாயக்
    X
    விருதுக்குரிய சிலை மற்றும் விருதுடன் சுதர்சன் பட்நாயக்

    இத்தாலியின் மணல் ஓவியப் போட்டியில் இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக்குக்கு விருது

    இத்தாலியில் நடைபெற்ற சர்வதேச மணல் ஓவியப் போட்டியில் மகாத்மா காந்தியின் சிற்பத்தை உருவாக்கிய இந்திய கலைஞர் சுதர்சன் பட்நாயக் விருதை வென்றார்.
    ரோம்:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் உள்நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களை செதுக்கி மக்களின் மனங்களிலும் அந்த பாதிப்பை உண்டாக்கி வருகிறார்.

    இதுதவிர பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச மணற்சிற்ப போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி வரும் மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் முதல் பரிசாக தங்கப் பதக்கம் மற்றும் பல்வேறு விருதுகளை வென்று தாய்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மகாத்மா காந்தியின் மணல் சிலை

    இந்நிலையில், இத்தாலி நாட்டின் லெஸ்ஸி நகரில் சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மணல் சிற்பப் போட்டியில் சுதர்சன் பட்நாயக் பங்கேற்றார். 8 நாடுகளை சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ரஷியக் கலைஞர் பவேல் மினில்கோவ் என்பவருடன் இணைந்து 8 அடி உயரத்தில்
    மகாத்மா காந்தி சிலையை மணலில் உருவாக்கி பார்வையாளர்களையும்  நடுவர்களையும் கவர்ந்தார்.

    இந்த சிலைக்காக இத்தாலி நாட்டின் ‘தங்க மணற்கலை’ விருதுக்கு சுதர்சன் பட்நாயக் தேர்வு செய்யப்பட்டார். ரோம் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் அவருக்கு இந்த விருது அளிக்கப்பட்டது.
    Next Story
    ×