search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சபரிமலை ஐயப்பன் கோவில்
    X
    சபரிமலை ஐயப்பன் கோவில்

    சபரிமலைக்கு வந்த 10 பெண்களை திருப்பி அனுப்பியது போலீஸ்

    சபரிமலைக்கு வந்த 10 பெண்களை கேரள போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளித்து, சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்புக்கு தடை எதுவும் விதிக்கவில்லை. 

    தற்போது மண்டல பூஜைக்காக இன்று மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை சுட்டிக்காட்டி சாமி தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் முன்பதிவு செய்து உள்ளனர். பெண்கள் ஆர்வலரான திருப்தி தேசாயும் சபரிமலை வர உள்ளதாக அறிவித்து உள்ளார். இதனால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நிலக்கல் மற்றும் பம்பையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து இன்று 10 பெண்கள் வந்திருந்தனர். அவர்களை கேரள போலீசார் பம்பையில் தடுத்து நிறுத்தினர். 

    அவர்களின் வயது, சபரிமலை ஐதீகத்திற்கு மாறாக 10 வயது முதல் 50 வயது வரையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சபரிமலையின் ஐதீகம் மற்றும் நம்பிக்கை குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறிய போலீசார், அவர்களை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் மேலும் பல பெண்கள் வருவார்கள் என்பதால், போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டியிருந்ததால், இந்த ஆண்டு சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவது இல்லை என்ற முடிவை கேரள அரசு எடுத்துள்ளது. 
    Next Story
    ×