என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுப்ரீம் கோர்ட்டில் இருந்து விடை பெற்றார் ரஞ்சன் கோகாய்
Byமாலை மலர்15 Nov 2019 10:55 AM GMT (Updated: 15 Nov 2019 11:49 AM GMT)
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனது பணிக்காலம் இன்றுடன் நிறைவடைவதையடுத்து அவருக்கு நீதிமன்ற வளாகத்திலேயே பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுடெல்லி:
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த நீதிமன்றமாக கருதப்படும் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பவர் ரஞ்சன் கோகாய்.
இவர் தனது பதவி காலத்தில் அயோத்தியா, ரபேல், சபரிமலை விவகாராம் உள்ளிட்ட மிகவும் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் தலைமை நீதிபதியின் பதவிக்காலம் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் (நவம்பர் 17) நிறைவடைகிறது.
ஆனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் இன்று அவரது பணிக்காலத்தின் கடைசி நாள் ஆகும்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் ரஞ்சன் கோகாய்க்கு இன்று பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
அடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள சரத் அரவிந்த் பாப்டே மற்றும் நீதிபதிகள் ரஞ்சன் கோகாயை வழியனுப்பி வைத்தனர்.
முன்னதாக, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் டெல்லியில் உள்ள தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்றார். அங்கு அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Next Story
×