என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐஎன்எக்ஸ் முறைகேடு- அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு
Byமாலை மலர்15 Nov 2019 9:31 AM GMT (Updated: 15 Nov 2019 9:31 AM GMT)
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்தாலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையும் அவரை கடந்த 16-ம் தேதி கைது செய்திருந்தது.
எனவே, அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கேட்டு டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுத்ததுடன், அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருதவேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பொருளாதார குற்ற வழக்கில் ஒருவருக்கு ஜாமீன் வழங்கினால், அது தவறான உதாரணமாக அமைந்துவிடும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
Next Story
×