search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெக்ரா
    X
    கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெக்ரா

    சபரிமலை தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை - டிஜிபி எச்சரிக்கை

    சபரிமலை கோவில் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போலீஸ் டிஜிபி லோக்நாத் பெக்ரா எச்சரித்து உள்ளார்.
    திருவனந்தபுரம்:

    சபரிமலை கோவில் நடை நாளை திறக்கப்படுவதையொட்டி அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இன்று (15-ந்தேதி) முதல்கட்டமாக 2,551 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 30-ந்தேதி வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமலில் இருக்கும். அதன்பிறகு 2-வது கட்டமாக கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    சபரிமலை கோவில் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக்கூடாது என்றும் அவ்வாறு அவதூறு பரப்பினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா எச்சரித்து உள்ளார்.
    Next Story
    ×