என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அருணாச்சல பிரதேச எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
Byமாலை மலர்15 Nov 2019 5:33 AM GMT (Updated: 15 Nov 2019 5:33 AM GMT)
அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்தார்.
பும்லா:
அருணாச்சல பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இன்று எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்தார்.
இந்தியா- சீனா எல்லையான, உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள பும்லா முகாமிற்கு சென்ற ராஜ்நாத்சிங், அங்குள்ள வீரர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
பின்னர் அவர்களின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து பேட்டி அளித்த ராஜ்நாத் சிங், ‘நமது வீரர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் எந்த பதற்றமும் இல்லை என வீரர்கள் தெரிவித்தனர்’ என்றார்.
Next Story
×