search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி
    X
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

    சுப்ரீம் கோர்ட்டு ரபேல் முறைகேடு விசாரணைக்கான கதவை திறந்துள்ளது - ராகுல் காந்தி கருத்து

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப், ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்துள்ளார் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்த முறைகேடு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது. இதுபற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்திதொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜேவாலா, “பா.ஜனதா தீர்ப்பை முழுவதுமாக பார்க்காமல் வரவேற்றுள்ளது. தீர்ப்பின் 73, 86-வது பத்தியில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் குறித்து சி.பி.ஐ.யோ அல்லது வேறு எந்த விசாரணை அமைப்போ விசாரணை நடத்தலாம் என்று கூறியுள்ளது. இதனை திசைதிருப்ப பா.ஜனதா முயற்சிக்கிறது” என்றார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஜோசப், ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்கான பெரிய கதவை திறந்துள்ளார். இப்போதே முழு அக்கறையுடன் விசாரணையை தொடங்க வேண்டும். இந்த முறைகேடு பற்றி விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் அமைக்கப்பட வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×