search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
    X
    காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆலோசனை

    மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக காங்கிரஸ், சிவசேனா, தேசியாவாத காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.
    மும்பை:

    288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, 24-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. 

    இதில் பாரதீய ஜனதா 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றியது. 

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், 161 இடங்களை கைப்பற்றிய பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 

    ஆனால் ஆட்சி அதிகாரத்தில் சம பங்கு தரவேண்டும் என சிவசேனா வைத்த கோரிக்கையை பாஜக நிராகரித்ததால் இந்த இரு கட்சிகளுக்கு இடையே மோதல் வெடித்தது. 

    இதனால் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை எந்த கட்சிக்கும் இல்லை என்ற நிலை காரணமாக ஏற்பட்ட அரசியல் குழப்பதால் மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சியை நடைமுறைபடுத்த பரிந்துரை வழங்கினார். இதையடுத்து அங்கு குடியரசுத்தலைவர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 

    இத்தகைய சூழ்நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி மேற்கொண்டுவருகிறது. 

    அதன் ஒருபகுதியாக, இந்த மூன்று கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மூன்று கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச பொதுவான திட்டத்தை உருவாக்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது. 

    இந்த மூன்று கட்சிகளுக்குள் ஒப்பந்தம் எட்டப்பட்டு கூட்டணி அமையும் பட்சத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி முடிவடைந்து விரைவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×