search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    பருவ நிலை மாற்றம் குழந்தைகளை தாக்கும் - ஆய்வில் தகவல்

    பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

    கார்பன் வெளியேற்றம், காடு அழிப்பு, மக்கள் தொகை அதிகரிப்பு, பனிபாறை உருகுதல், கடல் நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட காரணமாக வறட்சி, அடிக்கடி புயல்கள் உருவாகுதல், பலத்த மழை, புவி வெப்பமயமாதல் போன்றவை ஏற்படுகின்றன.

    சமீபத்தில் பயோ- சயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் பருவநிலை மாற்றத்தால் நினைத்து பார்க்க முடியாத கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்று தெரிவித்து இருந்தது.

    இதை ஏற்று உலகம் முழுவதும் 11 ஆயிரம் விஞ்ஞானிகள் கையெழுத்திட்டிருந்தனர். அந்த ஆய்வறிக்கையில், பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல இடங்களில் மனிதர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று புதிய ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    பருவ நிலை மாற்றத்தால் மனிதர்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படும். இதில் குழந்தைகளுக்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். ஊட்டச்சத்து குறைபாடு, தொற்று நோய்கள், உணவு விலை உயர்வு ஆகியவை காரணமாக குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். புவி வெப்ப மயம் காரணமாக குழந்தைகளுக்கு பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும்.

    காற்று மாசுவால் இதயம், நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புகள் பாதிக்கும். உலகம் முழுவதும் காற்று மாசுவால் ஏற்பட்ட உயிரிழப்பு 70 லட்சத்தை தொட்டு விட்டது.

    பருவ நிலை மாற்றத்தால் இந்தியா பெரிதும் பாதிப்பை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் 2016-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டுவரை நிலச்சரிவு பயன்பாடு 4 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.

    நிலச்சரிவால் ஏற்பட்ட காற்று மாசு காரணமாக உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன.

    இதனால் பருவநிலை மாற்றத்தை தடுக்க பாரீஸ் மாநாட்டில் தீர்மானித்த நடவடிக்கைகளை உலக நாடுகள் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×