search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடி கடிதம்
    X
    மோடி கடிதம்

    பிரதமர் மோடி இப்படி கடிதம் எழுதினாரா?

    பிரதமர் நரேந்திர மோடி எழுதியதாக வைரலாகும் கடிதத்தை உண்மையில் அவர் எழுதினாரா என தொடர்ந்து பார்ப்போம்.



    அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்ற நீதிமன்றம் அனுமதியளிப்பதாக நீதிபதிகள் நவம்பர் 9 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினர். இந்நிலையில், தீர்ப்பை வரவேற்று நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியிருப்பதாக கடிதத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

    ஆனால் இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், வைரலாகும் கடிதத்தை பிரதமர் மோடி எழுதவில்லை என தெரியவந்துள்ளது. போலி என கண்டறியப்பட்ட கடிதம் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நவம்பர் 11-ம் தேதி எழுதப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

    வைரல் கடிதம் ஒப்பீடு

    அந்த கடிதத்தில், நீதிபதிகள் குழுவின் ஆதரவிற்கு நன்றி என உள்ளது. கடிதம் பற்றி காஷ்மீரை சேர்ந்த செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. 

    வைரலாகும் கடிதத்தின் புகைப்படத்தில் இருக்கும் பிரதமர் மோடியின் கையெழுத்தையும், அவரது உண்மையான கையெழுத்தையும் ஒப்பிட்டதில், இந்த கடிதம் போலியென உறுதியானது. அந்த வகையில் நீதிபதிகளை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதவில்லை என்பதும் தெளிவாகியுள்ளது.

    போலி செய்திகளை பரப்பாதீர்கள். வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மை தெரியாமல் அவற்றை பரப்ப வேண்டாம். சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.
    Next Story
    ×