search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காற்று மாசுபாட்டால் முகமூடி அணிந்து பள்ளி செல்லும் மாணவிகள்
    X
    காற்று மாசுபாட்டால் முகமூடி அணிந்து பள்ளி செல்லும் மாணவிகள்

    காற்று மாசுபாடு எதிரொலி: டெல்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

    டெல்லியில் காற்று மாசுபாடு எதிரொலி காரணமாக நாளை முதல் இரண்டு நாட்களுக்கு அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையில் இருந்தே காற்று மாசுபாடு மிகவும் அபாய அளவைத் தாண்டியது. மனிதர்கள் சுவாசிக்க தகுதியற்ற அளவிற்கு காற்று மாசடைந்து உள்ளதால் கடந்த 1-ம் தேதி மருத்துவ அவசர நிலை அறிவிக்கப்பட்டது. 

    இதனால் கனரக வாகனங்கள் மற்றும் அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளின் இயக்கம் நிறுத்தப்பட்டது. பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. 

    காற்றின் தரம் சற்று சீரடைந்ததையடுத்து கடந்த சில நாட்களாக பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. ஆனாலும் காலை வேளையில் பனிமூட்டத்துடன் காற்று மாசடைந்து இருந்ததால் பள்ளி செல்லும் மாணவ, மாணவியர் தங்கள் முகங்களில் முகமூடி அணிந்து கொண்டு சென்றனர்.

    காற்று மாசுபாட்டிலும் தாஸ்மகாலில் புகைப்படம் எடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

    இந்நிலையில், டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாட்டின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளதை தொடர்ந்து, நாளை மற்றும் நாளை மறுநாள் ( நவம்பர் 14 மற்றும் 15) ஆகிய இரண்டு நாட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    மேலும், நிலக்கரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி அதிக புகையை வெளியிடும் தொழிற்சாலைகளை இரண்டு நாட்களுக்கும் மூடவும் ஆணையிட்டு சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம் உத்தவு பிறப்பித்துள்ளது. 
    Next Story
    ×